Wednesday, November 25, 2015

மைய நூலகங்களில் ரேடியோ ஸ்கேனர் எக்ஸ்ரே கருவி: ரூ.50 லட்சத்தில் அமைக்கப்படுகிறது

புத்தகங்களில் ஒட்டப்படும் ‘ரேடியோ அலைவரிசை அடையாளம் காணும்’ (ரேடியோ ப்ரிகொயன்சி ஐடன்டிபிகேசன்) தாள். (அடுத்த படம்) மதுரை மாவட்ட மைய நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே ஸ்கேனர் நுழைவுவாயில்.

புத்தகங்களில் ஒட்டப்படும் ‘ரேடியோ அலைவரிசை
 அடையாளம் காணும்’
 (ரேடியோ ப்ரிகொயன்சி ஐடன்டிபிகேசன்)
 தாள். (அடுத்த படம்) மதுரை மாவட்ட மைய நூலகத்தில் 
அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே ஸ்கேனர் நுழைவுவாயில்.



தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்ட மைய நூலகங்கள், 2,200 கிளை நூலகங்கள், 1,800 ஊர்ப்புற நூலகங்கள் உள்ளன. இதில் மாவட்ட மைய நூலகங்களுக்கு சராசரியாக தினமும் 500 முதல் 800 வாசகர்கள், புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்களை படிக்க வருகின்றனர். இவர்களில் ரூ.30 கட்டி உறுப்பினராக சேர்பவர்கள் மட்டும் வீட்டுக்கு புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்கலாம். மற்ற வாசகர்கள், புத்தகங்களை படித்த பிறகு, அவற்றை நூலகரிடம் ஒப் படைக்கும் நடைமுறை உள்ளது.

புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வோர், 15 நாட்க ளில் நூலகத்தில் திருப்பி ஒப் படைக்க வேண்டும். ஒப்படைக்காத பட்சத்தில் வாரத்துக்கு 50 பைசா வீதம் 15 நாட்கள் கடந்தபின், ஒவ்வொரு வாரமும் அபராதம் விதிக்கப்படும். போலி முகவரி கொடுத்து புத்தகங்களை எடுத் துச் செல்வோர் நூலகத்தில் திருப்பி ஒப்படைப்பதில்லை. சிலர் நூலகத்தில் புத்தகங்களை முறை யாக பதிவு செய்து எடுத்துச் செல் லாமல் திருடிச் செல்வர்.

புத்தகத்தை நூலகரிடம் முறையாக பதிவு செய்யாமல் எடுத்துச் செல்வதை தடுக்கவும், உறுப்பினர் அல்லாதவர்கள் புத்த கத்தை திருடிச் செல்வதை தடுக்கவும், ரூ.50 லட்சம் மதிப்பில் ‘ரேடியோ அலைவரிசை அடையாளம் காணும்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி அனைத்து புத்தகங் களிலும் ரேடியோ அலைவரிசை தாள் ஒட்டப்படும். இந்த புத்தகங் களை பதிவு செய்யாமல் எடுத்துச் செல்வோர், திருடிச் செல்வோர், புத்தக அறை நுழைவு வாயிலில் அமைக்கப்படும் ‘எக்ஸ்ரே ஸ்கேனர்’ வழியாகச் செல்லும் போது ‘பீப் பீப்’ சத்தம் அவர்களை காட்டிக் கொடுத்துவிடும். நூலக ஊழியர்கள் அவர்களை பரி சோதனை செய்து, அந்த புத்தகத்தை பறிமுதல் செய்வதோடு, அவரது உறுப்பினர் பதிவை ரத்து செய்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட மைய நூலக அலுவலர் சி.ஆர்.ரவீந்திரன் கூறியதாவது: முதற்கட்டமாக மதுரை, சென்னை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்ட மாநகராட்சி தலைநகரங்களில் உள்ள மைய நூலகங்களில் மட்டும், இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.

தற்போது மதுரை மாவட்ட மைய நூலகத்தில் எக்ஸ்ரே ஸ்கேனரும், புத்தகங்களில் ரேடியோ அலைவரிசை அடையாளம் காணும் தாள்களை ஒட்டும் பணியும் தீவிர மாக நடைபெறுகிறது. மற்ற மாவட் டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆயத்த பணிகள் நடைபெறுகின்றன. இன் னும் ஒரு மாதத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாநகராட்சி இல்லாத, மற்ற மாவட்ட மைய நூலகங்களில் இரண்டாம் கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

இலவசமாக பிரவுசிங் செய்யலாம்

மாவட்ட மைய நூலகங்களில் வாசகர்கள் இதுவரை ரூ.10 கட்டணம் செலுத்தித்தான் இணையதளத்தில் நுழைந்து போட்டித் தேர்வு சம்பந்தமான தகவல்களை பார்க்கவும், அதற்கான விண்ணப்பங்களை அனுப்பியும் வந்தனர். இனி, கட்டணமின்றி மாவட்ட மைய நூலகத்தில் இலவசமாகவே பிரவுசிங் செய்து போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்களை அனுப்பவும், அதற்கான தகவல்களை பார்த்தும் பயனடையலாம் என மதுரை மாவட்ட மைய நூலக அதிகாரி ரவீந்திரன் தெரிவித்தார்.
சி.ஆர். ரவீந்திரன்


தி இந்து 

No comments:

Post a Comment