Monday, November 23, 2015

டி.கே.சி.யின் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பும் நெல்லை பொருநை இலக்கிய வட்டத்தின் - 1662 வது கூட்டமும்!

Displaying img784.jpgDisplaying img784.jpg

ரசிகமணி

டி. கே. சிதம்பரநாத முதலியார்

                                                
செப்டம்பர் 11 1882 - பெப்ரவரி 16 1954


பக்கம்: 400   

மனிதனாய், மாமனிதனாய் டி.கே.சி., தடம் பதித்த தன்மையைத் "தடம் பதித்த மாமனிதன் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் தி.சுபாஷினி. டி.கே.சி.,யும் சான்றோர்களும் என்னும் பகுதியில் டி.கே.சி.,யால் மதிக்கப்பெற்ற வள்ளுவர், பாரதி, கவிமணி, ராஜாஜி, காந்திஜி ஆகியோர் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.

          டி.கே.சி.,யுடன் தொடர்பு கொண்டிருந்த கல்கி, ஜஸ்டிஸ் மகராஜன், வித்வான் சண்முகசுந்தரம், டி.டி.திருமலை, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ம.பொ.சி., - தி.க.சி., முதலானோர் பற்றியும் நூல் எடுத்துரைக்கிறது.டி.கே.சி., என, அழைக்கப்பெறும் சிதம்பரநாதன் என்னும் ரசிகமணியின் வாழ்க்கையை அழகாகத் தெரிவிக்கும் இந்த நூலில், அவரது நிழற்படங்களையும் தேடிக் கண்டுபிடித்து சேர்ந்திருப்பது சிறப்பு. வழக்கறிஞர் உடையில், மனைவி பிச்சம்மாளுடன் டி.கே.சி., என, கறுப்பு வெள்ளைக் காவியமாய் காட்சியளிக்கிறது. டி.கே.சி.,யின் வாழ்க்கையைத் தெரிவிக்கும் இந்த நூல், டி.கே.சி.,  தொடர்புடைய அனைத்தையும் விளக்குவதால், இதை "டி.கே.சி.,யின் உலகம் எனச் சொல்லும் அளவிற்குச் சிறப்பாய் அமைந்துள்ளது.

வட்டத்தொட்டி இலக்கிய  அமைப்பு

திருநெல்வேலியில் இவரது வீட்டின் நடு முற்றமாக இருந்த (தொட்டிக்கட்டு) வட்ட வடிவமான அமைப்பில் இவரது நண்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடுவார்கள். இந்தக் கூட்டத்திற்குத் தான் வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது. இவரின் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் மீ. ப. சோமு, பி. ஸ்ரீநிவாச்சாரி, கல்கி, ரா. பி. சேதுப்பிள்ளை, இராசகோபாலாச்சாரி, அ. சீனிவாச ராகவன், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், ச. வையாபுரிப்பிள்ளை, வெ. ப. சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.


வட்டத்தொட்டி  இல்லம்  என்னவாயிற்று ?  

வட்டத்தொட்டி  இல்லம்  திருநெல்வேலி , வண்ணாரப்பேட்டையில்   இருந்தது. இலக்கியம்  பரப்பிய  அவ்விடம்  காலம் செய்த கோலத்தால்  இன்று  கிறித்துவ  மதப்பிரச்சாரக்  கூடமாகத்  திகழ்கின்றது. . வாரிசுகள் வீட்டை விற்றுவிட்டதே  காரணம். விற் கப்பட்ட  வீட்டை  வழக்காடுமன்றம்   பெற்றிட முயன்று  இயலாமற்போனது . எப்படி முடியும் ?   

சென்னை மண்ணடியில் வள்ளலார் வசித்த இல்லம் ஓர் முகம்மதியக் குடும்பத்திற்கு உரிமையாகிவிட்டது. அவர் வள்ளலார் இருந்த திண்ணையை மட்டும் புனிதம் கெடாமல்  காத்து வருகின்றார்.

மாற்றங்கள்  தானே நிகழாது. நாம்தான்   மாற்றவேண்டும்.

ரசிகமணி  டி.கே. சி.யின் 

மகள்   வயிற்றுப்பேரன்  

தளவாய்   T. இராமசாமி  ( D.T.R. )

புரவலராக த்  தொடர்ந்து  

 நிகழ்த்தும்  பொருநை  இலக்கிய   வட்டம். 

டி.கே..சி .யின்  வட்டத்தொட்டி இலக்கிய   அமைப்பினை  நினைவு கூர்ந்து , 04-11-1984-ஆம நாள் துவக்கப்பெற்றது.  ஞாயிற்றுக்கிழமை தோறும் இன்றளவும் தொடர்ச்சியாக  நடைபெறுவது   அதிசயமே !

எது  நின்றாலும்  வாரந்தோறும்  ஞாயிறன்று  தமிழ்ப்பணி  தொடர்கின்றது. இவர்களைப்  பின்பற்றி   துணி வணிகர் இலக்கியவட்டமும் ௨௫  - 25 ஆண்டுகளாகத்  தொடந்து  நடத்தப்பட்டு  வருகின்றது.

பொருநை  இலக்கிய வட்ட நிறுவனர்கள , செயல்பாடுகள்  ஆகியவை குறித்து  அடுத்த பதிவில் காண்போம். 

23 - 11-2015 ஞாயிற்றுக்கிழமை காலை  11 மணிக்கு   -1662 -  வது வாரக்கூட்டம்    நடைபெறுகின்றது.

No comments:

Post a Comment