Monday, November 23, 2015

பொருநை :- 1000 வாரங்களில் 43 நூல்கள் - 1984 முதல் 2000 வரை ஆய்வு செய்த நூல்களின் எண்ணிக்கை!


சொற்பெருக்கின்  இடை  இடையே  சூடான  காரசாரமான  விவாதங்கள்  ஏற்பட்டு  எல்லோரும் உற்சாகம்  அடைவர்  .

பதினோரு  மணிக்குப்  பதமான  தேனீர்
மதுமேகம்  உடையார்க்கு  இனிப்பற்றும்
அதிமதுரச்  சுவையுடனே  இனிப்பாயும்
அது  அதனை அன்புடனே பரிமாறும்  - புரவலரே.

என்ற பாடலின்மூலம் இலக்கிய ஆய்வுகளுக்கு இடையிடையே சுவையான தேனீர்  வழங்கப்படும்  என்பதும்  தெரியவருகின்றது.  மேலும் மதிய வேளையில்  அறுசுவை உண்டி வழங்கியும் புரவலர்  அனைவரையும் கெளரவித்து மகிழ்வார்.
முப்பது  மணித்துளிகள்தான்தான்  ஒரு  தமிழறிஞர் உரையாற்ற அனுமதி வழங்கப்படும். 

திருக்குற்றாலம்

வானமாமலை  அருள்பாலிக்கும் நான்குநேரி
பாபவிநாசம்

Image result for திருக்குறுங்குடிImage result for திருக்குறுங்குடி

திருக்குறுங்குடி
ஆண்டுக்கொருமுறை  பொருநையின்  இன்பத்தமிழ் உலா. கோடைக்கேற்ற குற்றாலம், நவ திருப்பதிகளில் ஒன்றான  வானமாலை  அருள்பாலிக்கும் நான்குநேரி, நவகைலாயங்களுள் ஒன்றான பாபாவிநாசம், நவ திருப்பதிகளில் ஒன்றான  நம்பி நின்று  கிடந்து அருள்பாலிக்கும் திருக்குறுங்குடி ஆகிய  ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல  பொருநையின்  நிதிக்காப்பாளர்  திருமிகு ஆர். அருணாசல காந்தி அனைத்தையும் செவ்வனே  ஏற்பாடு  செய்து  தருவது  பாராட்டத்தக்கது.
இத்தனை  பொறுப்பெடுத்து,  இந்த  இனிய  பொருநை  இலக்கியவட்டத்தை  25 ஆண்டுகளாக  வரந்தோறும் தொடர்ந்து நடத்திவரும் புரவலர் தளவாய் இராமசாமி  ( D.T.R. )  அவர்களின்  தமிழ்ப்பணியை,  இந்த  இலக்கிய இயக்கத்தை  ஏன்  ஐந்தாம்  தமிழ்ச்  சங்கம்  என்று அழைக்ககூடாது ?  

No comments:

Post a Comment