Monday, November 23, 2015

நெல்லையில் ஐந்தாம் தமிழ்ச்சங்கம் - "தமிழகம்" , 27 - சித்தர் தெரு , திருநெல்வேலி நகரம் ( டவுண் ) , 627 006.







  முதல்  நான்கு  தமிழ்ச்சங்கங்கள் 

தமிழ்  கூறும்  நல்லுலகில்  நான்கு  சங்கங்கள்  நிலவியதைத்   தமிழ்  வரலாறு நமக்குத்  தெரிவிக்கின்றன.
Image result for மதுரை கோபுரம்

மதுரை

மூவேந்தர்களுள்  சங்கம்  வைத்துத்  தமிழ்  வளர்த்த  பெருமை பாண்டியர்களுக்கு  மட்டுமே  உண்டு.  தொன்று  தொட்டே  மதுரையில் தமிழ்ச்சங்கம்  இருந்தற்கு  எண்ணற்ற  இலக்கிய  ஆதாரங்கள்  உள.


கடல் கொண்ட  குமரியில்  தென்மதுரையில்  முதலாவது  தமிழ்ச்சங்கத்தை   காய்சின  வழுதியும்,  இரண்டாம்  தமிழ்ச்சங்கத்தைக்   கபாடபுரத்தில், பாண்டியன்  கடுங்கோனும்,  இன்றைய  மதுரையில்  மூன்றாம் தமிழ்ச்சங்கத்தைப்   பாண்டியன்  முடத்திருமாறனும்  முறையே  முதல், இடை,  கடை  என மூன்று  சங்கங்களை   நிறுவியதாக வரலாறின்  வளமான  பக்கங்கள்  நமக்குச்  செய்திகளைத்  தருகின்றன.


௧௯௦௧- - 1901-ஆம்  ஆண்டு, மே ௨௪ - 24 -ஆம்  நாள்  இராமநாதபுரம்  சேதுபதி மன்னர்  குடும்பத்தைச்   சேர்ந்த  திரு. பாண்டித்துரைத்தேவர்  நான்காம் தமிழ்ச்சங்கத்தைத்  தோற்றுவித்துத்  தமிழ்  வளர்த்ததையும்,  தமிழ்  இலக்கிய வரலாறு  இயம்புகின்றது .  

 ஐந்தாம்  தமிழ்ச்சங்கம் 

தமிழ்த்தாதை  D.T.R.  என்று  எல்லோராலும்    செல்லமாக  அழைக்கப்படும் பெரியவர்  தளவாய்  இராமசாமி ,  இரசிகமணி  டி. கே.சி. அவர்களின் பேரனாருக்கே  ஐந்தாம்  தமிழ்ச்சங்கம்  அமைக்கும்  எண்ணம் உருவானது. இளம்  பருவ முதலே  தாத்தாவுடன்  பல  இலக்கிய  நிகழ்வுகளுக்குச்  சென்று வந்ததன்  அகத் தூண்டுதலே  இதற்குக்காரணம்  என்று  உறுதியாகக்  கூறலாம்.  

எண்ணத்தைச்  செயற்படுத்திய  நாள் 04 - 11 - 1984.

உருவாக்கிய  முகவரி :-  "தமிழகம்" ,  27 - சித்தர்  தெரு ,  திருநெல்வேலி  நகரம் ( டவுண் ) , 627  006.

முதலில்  திருவாளர்கள்    புலவர் இராமையா ,    பணிவிடை பெற்ற  தலைமை  ஆசிரியர் இல. பார்த்தசாரதி ,   பணிவிடை பெற்ற  தலைமை  ஆசிரியர்  எ.உ. சுவாமிநாதன் , பணிவிடை  பெற்ற புலவர் செ .மு.,கமால் ஆகிய  ஆசிரியப் பெருமக்கள்  பொருநை  இலக்கிய வட்டம்  என்ற  இலக்கிய  அமைப்பை  உருவாக்கினர்.          

பொருநை  இலக்கியவட்டத்தின்  சிறப்பு 

இது  சங்கப்  பலகை  போன்றது.  எத்தனைபேர்  தமிழ்  வளர்க்க  வந்தாலும், இந்த  அவையில்  இடம்  உண்டு.  பங்கேற்போர்  முகவரி,  புரவலர்  கைவசம் கிடைத்துவிட்டால்,  பொருநையின்  ஒவ்வொரு விழாவிற்கும்  அழைப்பு அனுப்பத்  தவறுவதில்லை.  இவ்வமைப்பின்  தனிச்சிறப்பு  என்னவெனில், மாத,  ஆண்டு,  ஆயுள்சந்தா  ஒன்றும்  வசூலிக்கப்படுவதில்லை.  உறுப்பினர் படிவம்  கிடையாது.  வந்தாரை  வாழவைக்கும்  தமிழகத்தில் திருநெல்வேலி நகரத்தில்  , சித்தர்  தெருவில் ,  தமிழகம் என்ற  திருப்பெயருடைய  தமது இல்லத்தில், தேடிவரும்  தமிழ்ச்  சான்றோர்களை  எல்லாம்  இன்றும் வாசவைத்துகொண்டிருக்கின்றார்.,  தமிழ்த்தாயின்  தவப்புதல்வர்  திருமிகு தளவாய் ( D.T.R. ) !    ஒவ்வொரு  ஞாயிற்றுக்கிழமையும்,  முற்பகல்  ௧௦௦ 11.00 மணிக்குயளவிலிருந்து    மதியம்  ஒரு மணிவரை  சரியாக  இரண்டு மணிநேரம்  சொல்வீச்சு நடைபெறும். உயர்தனிச்  செம்மொழியான  தமிழை வளர்க்கவும் , தமிழ்ப் பெரியவர்களுக்கு  உரிய  மரியாதை  செய்திடவும் பொருநை  இலக்கியவட்டம்  ஏற்படுத்தப்பட்டதாகத்  தெரிகின்றது.  


No comments:

Post a Comment